பணம்சார் உளவியல் (Psychology of Money) நூல் விற்பனைக்கு உள்ளது. விலை: ரூ. 325/- தள்ளுபடி விலை: ரூ. 320/- அஞ்சல் இலவசம். நூல் வேண்டுவோர் உடனே எம்மை தொடர்பு கொள்ளவும். (பேசி: 9444086888 - Whatsapp). GPay Ph: 9444086888 (Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank |
தமிழ் நூல் அட்டவணை |
அன்புடையீர் வணக்கம்! பத்தாண்டு தமிழ்ச் சேவையை எமது ‘சென்னைநூலகம்.காம்’ (www.chennailibrary.com) இணைய தளம் நிறைவு செய்துள்ள இந்த மகிழ்ச்சி பொழுதில் எம்மால் 2016 செப்டம்பர் 25ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘அட்டவணை.காம்’ (www.attavanai.com) இணையதளம் அனைத்து தமிழ் நூல்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் பல்வேறு நூலகங்களில் உள்ள நூல்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உள்ளேன். வாசகர்களும் தங்களிடம் உள்ள நூல்களின் விவரங்களை எங்களுக்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன். வாசகர்கள் தங்களிடம் உள்ள நூல்கள் குறித்த விவரத்தை இங்கே உள்ள உங்கள் கருத்துக்கள் பகுதியில் அனுப்பலாம். நீங்கள் கீழே உள்ள வரிசைப்படி உங்கள் நூல் குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும். ஏதேனும் தகவல் இல்லையென்றால் அதனை விட்டுவிடலாம். உதாரணமாக ISBN இல்லையென்றால் அதனை விடுத்து பிற தகவல்களை குறிப்பிட்டுள்ள வரிசைப்படி அனுப்பலாம்.
இது மிகப்பெரிய திட்டம், இதுவரை யாரும் செய்யத் துணியாத திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம், இவையெல்லாவற்றிற்கும் மேலாக, பணமோ, பாராட்டோ கிடைக்காத திட்டம் என்பதால், வாசகர்களின் ஒத்துழைப்பே சிறந்த பாராட்டாகவும், அவர்கள் அளிக்கும் ஒவ்வொரு நூல் குறித்த விவரமுமே, பணமுடிப்பாகவும் கொள்வேன். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தங்களிடம் உள்ள நூல்கள் குறித்த விவரங்கள் அளித்து உதவுங்கள். நூல் குறித்த விவரம் அளிக்கும் முன் அந்த நூல் ஏற்கெனவே பதிவெற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை தேடிப் பார்த்து விட்டு அனுப்பவும். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அன்புடன் கோ.சந்திரசேகரன் |